1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:13 IST)

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!

அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வு பெற்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து பொறியியல் உள்பட தொழில்நுட்ப கல்வியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அரசுப்பள்லி மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது