செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (17:51 IST)

தூய்மைப் பணியாளர் காலில் விழுந்த அமைச்சர் …

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கொரோவைத் தடுக்க இந்திய அரசு வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் பலகோடி மக்கள் தினக்கூலி செய்வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், திருமங்கலம் தொகுதியில் தூய்மைப்  பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பணியாளர்களின் காலி விழுந்து வணங்கினார்.

இன்று திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கோட்டை, ஆலம்பட்டி, அலப்பலச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது,  அமைச்சர் உதயகுமார், ஒரு தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து வணங்கினார். இது அங்கு கூடியிருந்த மக்களை நெகிழச் செய்தது.