1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (00:36 IST)

மோகனூர் கதவணை தடுப்பணை திட்டத்தை கைவிட்ட அரசு!!

மணல் குவாரி நடத்துவதற்காக ஒடுவந்தூர் கதவணை- தடுப்பணை, மோகனூர் கதவணை தடுப்பணை திட்டத்தை கைவிட்ட அரசு!!
 
காவிரி ஆற்றில்
 
புதிய மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிராக நாமக்கல் மோகனூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
 
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் பத்திரிக்கை செய்தி
 
இன்று 02-04-2022 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சாமானிய மக்கள் நலக் கட்சி ஒருங்கிணைப்பில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தோழமையுடன் நாமக்கல் மோகனூரில் அண்ணா சிலை அருகில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச் செயலாளர் முனைவர்.  குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் வாங்கல் விசுவநாதன், வாங்கல் அய்யா. பழனிசாமி, சு.விஜயன், ந. சண்முகம் மற்றும் சாமானிய மக்கள் நலக்கட்சி பொருளாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். ராஜகுரு, திருச்சி மாவட்ட செயலாளர் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டு உரையாற்றினர். சாமானிய மக்கள் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
 
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன் அவர்கள் பேசிய உரையின் சுருக்கம்...
 
*காவிரி கொள்ளிடம் உள்ளிட்ட தமிழக ஆறுகளில் 66 புதிய மணல் குவாரிகள் தமிழக அரசு  அமைக்கக் கூடாது
 
* தமிழகத்தின் மணல் தேவைக்கு, தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யாமல் தொடரச் செய்து, தினசரியும் 15 லட்சம் மெட்ரிக் டன்  இயற்கை ஆற்றுமணலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்
 
* தமிழகத்தின் அனைத்து அணைகளையும் தூர்வாரி,  தமிழகத்தினுடைய மணல் தேவையை 5 ஆண்டுகள் நிறைவு செய்ய முடியும். தமிழக அரசு அதைச் செய்ய வேண்டும்.
 
* காவிரி கொள்ளிடம் உள்ளிட்ட எந்த ஆறுகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக மணல் வந்ததற்கான எந்த ஆதாரமும் அடிப்படையும் இல்லை. அரசு இதற்கான சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
 
ஏற்கனவே 160 வருடம் அள்ள வேண்டிய ஆற்று மணலை 30 ஆண்டுகளில் அள்ளி விட்டதால் புதிய மணல் குவாரிகள் எங்கும் அமைக்கக் கூடாது
 
* நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 8 மணல் குவாரிகள் அமைப்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட
ஒடுவந்தூர் கதவணை- தடுப்பணை, மோகனூர் கதவணை தடுப்பணை திட்டத்தை கைவிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
* 2017 முதல் ஐந்து ஆண்டுகள் காவிரி ஆற்றில் மணல் அள்ளாத நிலையிலும், 40 வகையான அபாயகரமான மருத்துவ கழிவுகள் காவிரி ஆற்றில் தற்போது இருப்பதை ஐஐடி ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரிகள் அமைக்கக் கூடாது.
 
ஏனெனில் காவிரி ஆற்றில் உள்ள மணல் தான் இந்த கழிவுகளை சுத்திகரித்து வருகிறது.
 
* காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரிகள் அமைப்பது என்பது, டெல்டாவை பாலைவனமாக்கி டெல்டா மாவட்டத்தில் உள்ள 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மீத்தேன், ஷேல் மீத்தேன் உட்பட ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான, பன்னாட்டு நிறுவனங்களுக்கு டெல்டாவை தாரை வார்ப்பதற்கான சதியின் ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டும்
 
* இந்தியாவை ஆளும் பாஜக அரசின் துணையுடன்,  கர்நாடக பாஜக அரசு பெங்களூருக்கு குடிநீர் தேவை என்ற பொய்யான ஒரு காரணத்தை முன்வைத்து மேகதாதுவில் அணை கட்டுவது கூட டெல்டாவை பாலைவனமாக்குவதற்கான சதியின் ஒரு அங்கம்தான் ‌
 
* காவிரியில் புதிய ஆற்று மணல் குவாரிக்கு அனுமதி கொடுப்பது என்பது, 26 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், 15 மாவட்ட மக்களின் விவசாய ஆதாரத்தை அழிக்கின்ற அபாயகரமான நடவடிக்கையாகும்.  தமிழக அரசு இதை மேற்கொள்ளக் கூடாது
 
என்று உரையாற்றினார்.
 
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், நாமக்கல் மோகனூரில் ஒடுவந்தூர் மணல் குவாரியை எதிர்த்தும், குமரிபாளையம் மணல் குவாரியை எதிர்த்தும் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியும், மணல் குவாரியை எதிர்த்து வரலாறு படைத்த மோகனூரில், இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் மக்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
 
@ த.சண்முகம்,
சு.விஜயன்,
ஒருங்கிணைப்பாளர் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
 
97919- 78786,
73734- 53038
 
02-04-2022
 
இணைப்புகள்:
1. ஆர்ப்பாட்ட பதாகை
 
2. ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்
You sent