1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (13:34 IST)

சிறுமி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என காவல்துறை கூறியது: ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன்

புதுவையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என என்னிடம் காவல்துறை கூறியது என்றும் எனக்கு எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து தான் நான் அங்கு சென்றேன் என்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரியில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பலியான சிறுமி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என என்னிடம் காவல்துறை  கூறியது, எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்துதான் அங்கு சென்றேன், சிறுமியின் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினேன் 
 
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து சிறுமிக்கு நீதி கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன். சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த புதுச்சேரி அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன் 
 
சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை தர வேண்டும் என்றும் போதைப் பொருள் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரியில் போதைப்பொருள் பழக்கம் அடக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் சட்டங்கள் மட்டும் அனைத்தையும் செய்து விட முடியாது, பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டும், பெண் பிள்ளைகள் தாமதமாக வந்தால் கேட்கும் நாம் ஆண் பிள்ளைகள் இரவு 2 மணிக்கு வந்தால் கூட கேட்பதில்லை என்று அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran