திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2023 (10:15 IST)

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முழக்கம்: அமளிக்கு இடையே அமைதியாக உரையாற்றும் ஆளுனர்

Governor
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிராக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதை அடுத்து அமளிக்கு இடையே அமைதியாக ஆளுநர் உரையாற்றி வருகிறார்.
 
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில் ஆளுநர் தனது உரையை ஆற்றி வருகிறார். அவர் தனது முழு உரையையும் தமிழில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆளுநரை பேசவிடாமல் ஒரு சில கட்சிகளின் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் ஆளுநர் எதிராக கோஷம் ஏற்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் அமளிக்கு இடையே ஆளுநர் அமைதியாக உரையாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva