வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (21:18 IST)

பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்... ஆளுநர் தரப்பு விளக்கம்!!

கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ள சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று தடுப்பை தாண்டி இளம்பெண் ஒருவர் குளிப்பதை பார்த்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சில நாட்களுக்கு முன்னர் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். இவரது இந்த செயல் சட்டத்தை மீறிய செயல் என அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டினர். 
 
இந்நிலையில் மீண்டும் தனது ஆய்வை கடலூரில் மேற்கொண்டார். அப்போது, வீடுகளுக்கு முன்னால் இருக்கும் கீற்று தடுப்புகளை நீக்கி ஆய்வு செய்தார். அது அவர்களின் குளியலறை என ஆளுநருக்கு தெரியவில்லை. அப்போது ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டு இருந்ததை ஆளுநர் நேரில் பார்த்ததாக அந்த பெண் புகார் கூறினார்.
 
ஆனால், இதை ஆளுநர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து இணை தலைமை செயலாளர் கூறுகையில் கவுரி என்பவரது வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ஆளுநர் பார்வையிட இருந்தார். 
 
ஆனால் அதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரியும், ஆட்சியரும்தான் முதலில் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்துதான் ஆளுநர் சென்றார்.அந்த பெண் புகார் அளித்தது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.