1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Governor should answer for NEET suicides Anbumani Ramadoss

நீட் தற்கொலைகளுக்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Governor should
நீட் தேர்வை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள பாஜக தவிர, அதிமுக திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில்,  நீட் தேர்வு குறித்து கூறிய போது பல சட்ட போராட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றதைப் போல் நீட்தேர்வு சட்ட போராட்டத்திற்கு எதிராக முதலமைச்சரின் குரல் நியாயமான குரல் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக தமிழகத்தில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகளில் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர் என்றும் அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்  நடப்பாண்டில், இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று காலை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் நாட்டில் அதிகரித்துள்ள நீட் தற்கொலைகளுக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்!