திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (07:50 IST)

கிறிஸ்துமஸ் பண்டிகை: டிசம்பர் 24ம் தேதியும் விடுமுறை!

holiday
இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ஞாயிறு என்பதால் ஏற்கனவே விடுமுறை நாளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 24ஆம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த விடுமுறையை ஈடுகட்டுவதற்காக ஜனவரி 11 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடிய அன்றைய தினமே வெளியூர் நபர்கள் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் டிசம்பர் 26-ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
Edited by Siva