திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (07:27 IST)

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

cm governor
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? என தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு. போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. போதைப் பொருளால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாப் மாநிலம்.
 
நான் தமிழகம் வந்த நாள் முதல், பெற்றோர்கள் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் செய்ற்கை போதை உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிவது இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது என ஆளுனர் தெரிவித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சி கள்ளட்சாராயம் சம்பவத்தில் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா என ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva