ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (07:00 IST)

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் டிரைலரில் ஜூலை வெளியீடு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அறிவித்தபடி ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா அல்லது ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.