1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (17:04 IST)

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

udhayakumar
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் தேர்தலை புறக்கணித்தால் கட்சி அழிந்து விடும் என்று விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது என்றும் திமுக என்ன அழிந்துவிட்டதா என்றும் ஆர் பி உதயகுமார் கூறினார் 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஆடு மாடுகள் போல் பட்டியில் அடைத்தனர் என்றும் பண பலத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்றும் ஜனநாயகத் தன்மையுடன் இடைத்தேர்தல் நடக்காது என்பதால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும் ஆர்பி உதயகுமார் கூறினார் 
 
ஏற்கனவே புதுக்கோட்டை ஆர்கே நகர் போன்ற இடைத்தேர்தலில் திமுக புறக்கணித்துள்ளது என்றும் அதனால் திமுக அழிந்துவிட்டதா என்றும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவில்லையா அதுபோல் இடைத்தேர்தலை புறக்கணித்தால் கட்சி அழிந்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்
 
Edited by Mahendran