திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (12:36 IST)

குட்கா ஊழல் வழக்கு: விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்

vijayabaskar
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த தகவலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ தெரிவித்துள்ளது.
 
ஒப்புதல் அளித்த கோப்புகள் சிபிஐ.யின் பரிசீலனையில் உள்ளதாகவும்,  விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவவழக்கின் விசாரணை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. 
 
முன்னதாக தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு  விசாரணை நடந்து வருகிறது.
 
முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய கவர்னர் அனுமதி தேவை என்பதால் சிபிஐ கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran