புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (15:08 IST)

மாமல்லபுரத்திற்குள் பேருந்துகள் செல்ல தடை – பேருந்து நிலையம் மாற்றம் !

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பை ஒட்டு மாமல்லபுரத்தில் பேருந்துகள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் பேருந்துகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஷேர் ஆட்டோக்களும் அடக்கம். இதற்காக கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.