செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (20:40 IST)

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த அரசாணை வெளியீடு !

பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல்  இருப்பது தெரியவந்தால் அவர்கள்  விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை கூறியுள்ளதாவது :

வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் விடுபட்ட தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் ; காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கைதொடா கருவி மூலம் காலையிலும் மாலையிலும்  அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும் அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.