1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:34 IST)

வீடுதேடி வரும் நடமாடும் மருத்துவமனை: முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு

வீடுதேடி வரும் நடமாடும் மருத்துவமனை
கொரோனா பரபரப்பில் மருத்துவமனைகள் அனைத்தும் பரபரப்பாக இருக்கும் நிலையில் கொரோனா தவிர மற்ற உடல்நிலை பாதிப்பால் ஏற்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்து வருவதாக ஆங்காங்கே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
எனவே காய்ச்சல் உள்பட பல்வேறு உபாதைகளை சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு வீடு தேடி வரும் நடமாடும் மருத்துவமனை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது
 
கர்நாடக மாநில போக்குவரத்தில் உள்ள அரசு பேருந்து ஒன்று தற்போது நடமாடும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் உள்ள நிலையில் இந்த மருத்துவமனை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்கு உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது
 
முதல் கட்டமாக மங்களூர் பகுதிக்கு இந்த நடமாடும் மருத்துவமனை சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் கொடுத்த வரவேற்பை அடுத்து இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த நடமாடும் மருத்துவமனை திட்டத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில் மருத்துவமனையை நோக்கி செல்ல முடியாதவர்கள் இந்த நடமாடும் மருத்துவ மனையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது