கூடுதல் பேருந்துகள் தேவையா? அரசு உதவி எண்கள் அறிவிப்பு!!
தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகுமாறு அரசு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்து ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகலாம் என அரசு கோரியுள்ளது.
9445014402, 9445014416, 9445014463 ஆகிய எண்களுக்கு அழைத்து ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.