கல்வி கொள்கையை ஆராய குழு: அரசு உத்தரவு!
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்களை ஆராய குழு அமைக்கிறது தமிழக அரசு.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய அவர் “மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது போல உள்ளது எனவே கல்வி கொள்கையை ஏற்க வேண்டாம் என பலர் கூறிய நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறது தமிழக அரசு பிறப்பித்துள்ளது.