தொடர்புடைய செய்திகள்
- எவ்வாறு பதவிப்பிரமானம் செய்ய முடியாது என கூற முடியும்?- ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்காத ஆளுநர்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு..!
- பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ரவி: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!
- பொன்முடியை அமைச்சராக்க முடியாது.. தமிழக முதல்வருக்கு ஆளுனர் ரவி பதில் கடிதம்?
- நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: ராஜினாமா செய்கிறாரா கவர்னர் ரவி?
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறிய கவர்னர் ரவி இன்று ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு வழக்கில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பிய கவர்னர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்ற குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் குறிப்பிடுபவரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் கவர்னர் வேலை என்றும் 24 மணி நேரத்தில் அவர் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன் வரவில்லை என்றும் அதனால் அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Edited by Mahendran
