வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (11:35 IST)

இலாகா இல்லாத முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி அறிவிப்பு

arvind kejriwal
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டாலும் அவர் இலாகா இல்லாத முதல்வராக தொடர்வார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்று 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதன் பின் அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பல அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டாலும் டெல்லி முதல்வராக தொடர்வார் என்றும் இலாகா இல்லாத முதலமைச்சராக அவர் இருப்பார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவுக்கு தனக்குத்தானே ஆஜராகி அரவிந்த் கெஜ்ரிவால் வாதாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva