1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gold rate increases

உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!

கொரோனா
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றைய நிலவரம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.34,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 உயர்ந்து ரூ.4,297-க்கு விற்பனை ஆகிறது.  
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் கொரோனா பரவல்: நாளை முக்கிய அறிவிப்பு என தகவல்