அனுமதி இன்றி வாக்குச்சாவடிக்குள் சென்ற ஸ்ருதிஹாசன்… தேர்தல் ஆணையரிடம் புகார்!

Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (08:24 IST)

நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையோடு வாக்குச்சாவடிக்குள் சென்றது தொடர்பாக பாஜக பூத் ஏஜெண்ட் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு நேற்று கோவை சென்று அங்குள்ள வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவரோடு ஸ்ருதிஹாசனும் சென்றிருந்தார். ஆனால் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் மற்றும் பூத் ஏஜெண்ட் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்ற ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வாக்குச்சாவடி முகவர் நந்தகுமார் என்பவர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :