1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (11:18 IST)

ரூ.43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.35 விலை உயர்ந்து ரூ.5,380க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 விலை உயர்ந்து ரூ.75க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகபட்சமாக ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K