1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. #GoBackModi Leading actress who started the trend on Twitter

#GoBackModi டுவிட்டரில் டிரெண்டை தொடங்கி வைத்த முன்னணி நடிகை !

#GoBackModi Leading
விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நாளை நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளநிலையில் இன்று சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான #GoBackModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

முன்னதாக, பிரதமர் மோடி , நேற்று சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000  நிவாரணத்தொகை அறிவித்தார்.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இதற்காக நாளை காலை எட்டு மணிமுதல் மதியம் வரை முக்கியசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

நாளை தமிழகத்தில் பிரதமர் மோடி பல கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழகம் வரவுள்ள மோடிக்கு எதிர்ப்ப் தெரிவித்து எதிர்ப்புத் தெரிவித்து, #GoBackModi என்ற ஹேஸ்டேக் டிரெண்டை டுவிட்டரில் தொடங்கி வைத்துள்ளார் பிக்பாஸ் புகழ் ஓவியா.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!