ட்ரோல்ஸ், மீம்ஸ்: 7 கோடி கணக்குகளை முடக்கிய டிவிட்டர்!
சமூக வலைத்தளமான டிவிட்டர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் 7 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து ட்ரோல், மீம்ஸ் என்ற பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இது போன்ற பதிவுகள் உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதைதொடர்ந்து, சர்ச்சை கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்தது.
அதன்படி கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.