திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:20 IST)

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம்...குடும்பத்தோடு தீ வைத்து எரித்த காதலன்...

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயமானதால் காதலியின் வீடு புகுந்து தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள்  காதல் என்ற பெயரில் முதிர்ச்சியற்ற செயல்களைச்  செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், ஒரு இளைஞர் சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் அவரைக் காதலித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அப்பெண்ணுக்கு அவரது பெறோர் மாப்பிள்ளை பார்த்து, நிச்சயமும் செய்துள்ளனர்.

இதை அறிந்த காதலன் காதலியின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன் வீட்டின் கதவைத் தாழிட்டு தீயைப் பற்ற வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதில், தீக் கொளுந்துவிட்டு எரிந்ததால் இளைஞர் காதலி மற்றும் அவரது அம்மா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

இந்தச் சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.