நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா
Last Updated: வியாழன், 16 ஜூலை 2020 (07:40 IST)
நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா
நேற்று
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் கோவை ஆட்சி தலைவரை அடுத்து நேற்று காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் காய்ச்சல் காரணமாக அலுவலகத்திற்கு வராமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :