வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (11:39 IST)

திட்டாம.. அடிக்காம.. குணமா சொல்லனும் - வைரலாகும் சிறுமியின் வீடியோ

சேட்டை செய்தால் அடிக்கக் கூடாது. குணமாக வாயில் சொல்ல வேண்டும் என சிறுமி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 
சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், சேட்டை செய்த சிறுமியை அடித்து மிரட்டி அவளின் தாய் கீழே அமர வைத்துள்ளார். அவரிடம் ‘சேட்டை செய்வது தப்பா இல்லையா?’ என கேட்க, தப்புதான். ஆனால், அடித்தாலும் தப்புதான்.. சேட்டையே செய்தாலும் அடிக்கக் கூடாது. குணமாக, வாயில் சொல்ல வேண்டும்’ என அழுது கொண்டே அந்த சிறுமி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இத்தனை நாள் எங்கடா செல்லம் இருந்தே?’ என அந்த சிறுமியை கொஞ்சி வருகின்றனர்.