வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (15:53 IST)

தாயின் சடலத்தை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மகன்; வைரலாகும் வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயின் சடலத்தை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் அருகே உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். அவரது சடலத்தை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியதால், மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவசர ஊர்தி அனுப்புமாறு இறந்தவரின் மகன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை  உரிய பதில் அளிக்கவில்லை.
 
இந்நிலையில் அவர் இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தன் தாயின் சடலத்தை பிரேதப்  பரிசோதனைக் கூடத்திற்கு தனது இருசக்கர வாகனத்திலேயே அவர் எடுத்துச் சென்றார். கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலது, இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.