வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:09 IST)

கோபம் வந்தால் நான் சுனாமி - தெறிக்க விடும் ஸ்ரீரெட்டி

கோபம் எல்லை மீறினால் தன்னை யாரலும் கட்டுப்படுத்த முடியாது என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.  அதோடு, இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில், ஒரு இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “நானும் சாதாரண பெண்தான். எனக்கும் எல்லா செண்டிமெண்டும் இருக்கிறது. பிரச்சனைகளை நேரிடையாக பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது. நான் கடினமாக உழைக்கும் ஒரு பெண். அப்போது அமைதியாக இருந்து விட்டு இப்போது ஏன் பேசுகிறீர்கள்? என கேட்கிறார்கள். அதிகபட்ச பொறுமையை நான் கடைபிடித்து விட்டேன். அதுதான் என் நெகட்டிவ். ஆனால், நான் பொறுமையை இழந்தால் என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அப்போது ஒரு சுனாமி போல சீறுவேன்” என அவர் தெரிவித்தார்.