சென்னை மெரினாவில் திடீர் சுழற்காற்று.. பொதுமக்கள் அதிர்ச்சி.. கடைகள் சேதம்..!
சென்னை மெரினாவில் நேற்று திடீரென ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் அவ்வப்போது சூழல் காற்று ஏற்படுவது சகஜம்தான் என்றாலும் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட சுழல் காற்று பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழல் காற்று காரணமாக மெரினாவில் இருந்த சில கடைகள் சேதம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
மெரினாவில் ஏற்பட்ட திடீர் சூழல் காற்றின் ஆபத்தை உணராமல் பலர் அதன் அருகே என்று செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஒன்று புள்ளி
Edited by Siva