1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (17:12 IST)

தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

cows
தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெருமாடுகளில் பாலால்  நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் குழந்தைக்க்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதால், சாலையில் உணவை வீசிச் செல்லாமல்,  நாய்களை தத்தெடுத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.