வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (16:17 IST)

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு: நீதிமன்றம் உத்தரவு

Education
பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ மற்றும் குரூப் பிஅதிகாரிகள் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
மேலும் ஆசிரியர் கூட்டமைப்புகளில் அலுவலர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல் சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க இந்த ஆய்வு பெருமளவு உதவும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.