வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (16:06 IST)

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

education
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப் படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது இருமொழி கொள்கைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்த பட உள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்றைய ஒரு சில செய்தித் தாள்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்த இருப்பதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை உறுதிபடக் கூறி உள்ளது