மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகி கைது
ஹாக்கி பயிற்சியாளரும்திமுக நிர்வாகியுமான சங்கர் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டி நாட்கு பெண்கள் ஹாக்கி செயல்பட்டு வருகிறது. இதில், ஹாக்கி ஆர்முள்ள பள்ளி மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களுக்குப் பயிற்சியாளராக சங்கர் இருக்கிறார். இந்நிலையில் இரு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.