1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar warns H Raja for his tweet

தேவையில்லாம அதிமுகவை சீண்டி பாக்காதீங்க! – எச்.ராஜாவுக்கு ஜெயக்குமார் வார்னிங்!

Tamilnadu
விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அதிமுக குறித்து எச்.ராஜா சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எச்.ராஜாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “பொதுவெளியில் ஒன்று பேசிவிட்டு பிரச்சினை வந்தால் கோர்ட்டில் போய் மன்னிப்பு கேட்பவர் எச்.ராஜா. நான் கருத்து போடவில்லை என் அட்மின்தான் பதிவிட்டார் என மலுப்புவார். தமிழக அரசு ஆண்மையான அரசு. எச்.ராஜா சொன்னது அவருக்குதான் பொருந்தும். அதிமுகவை எச்.ராஜா உரசிப்பார்க்க நினைப்பது ஆபத்து “ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்திய - இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த மஹிந்த யாப்பா இன்று சபாநாயகர்