புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (14:24 IST)

பத்திரிகையாளர்களை கதற வைத்த அண்ணாமலை: இனி யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை!

annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது காரசாரமாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 குறிப்பாக முன்னணி ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் ஈஷா மையத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த கேள்விக்கு மடக்கிய அண்ணாமலை அடுத்தடுத்து அவரிடம் கேள்வி கேட்டபோது செய்தியாளர் திணறிய காட்சியை பார்க்க முடிந்தது.
 
அதேபோல் ரபேல் வாட்சில் உளவுபொருள் இருப்பதாக சந்தேகம் கேட்ட ஒரு செய்தியாளரிடம் வாட்சை கழட்டி கொடுத்து, இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மேலும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் கூற மறுத்த அவர் இனிமேல் யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
 
 மேலும் ஒருசில பத்திரிகையாளர்களே யூடியூப் சேனல்களை அழைக்க வேண்டாம் என்றும் கூறினார்கள்.  மொத்தத்தில் இன்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கெல்லாம் எதிர் கேள்வி கேட்டு பத்திரிகையாளரை அண்ணாமலை கதற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran