திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (09:52 IST)

4 ஆடுகளை வைத்து இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? – அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி!

Gayathri Raghuram
சமீபமாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தி தெரிவித்து பலர் கட்சியை விட்டு நீங்கி வரும் நிலையில் அண்ணாமலை குறித்து முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக கட்சி மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதல் தமிழக பாஜகவில் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக பாஜகவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என கூறி கட்சி நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். சமீபத்தில் சி.டி,நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மேலும் சிலரும் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை மீது மறைமுக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் அதிகமாக முதுகில் குத்தப்பட்ட அரசியல் தலைவர் நான்தான் என்றும், இன்னும் பல பேர் முதுகில் குத்த இடம் உள்ளதாகவும், கட்சியை விட்டு விலகியோரின் நிலைபாடு குறித்து விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலைக்கு சில கேள்விகள் எழுப்பி பதிவிட்டுள்ள காய்த்ரி ரகுராம் “அண்ணாமலை ஊழல் செய்யாதவராக இருந்தால், தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து அவர் தனது சொந்த டிரஸ்ட்டில் செய்யப்பட்ட டெபாசிட்கள், பரிவர்த்தனைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தமிழகத்திற்கு காட்டுவார்? வாட்ச் பில் உடன்.. அவர் இந்த சவாலுக்கு ஒப்புக்கொள்கிறாரா? ஊழல், கமிஷன், வசூல் என்பது இங்கு பெரும் கேள்வியாகி வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “மாநிலத் தலைவர் ஆன பிறகு அண்ணாமலை மூலம் எத்தனை யூடியூப் சேனல்கள் நிதியளிக்கப்படுகின்றன? எத்தனை ஊடகங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது? மாநிலத் தலைவர் ஆன பிறகு சமீப காலத்தில் எத்தனை நிறுவனங்கள் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டுள்ளன? அவரது வருமானம் என்ன? ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 4 ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? இன்றைய மக்களின் கேள்வி” என்று பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K