திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:00 IST)

நீட் தேர்வு விவகாரம்: திமுகவுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!

annamalai
நீட் தேர்வு விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். 
 
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என திமுக வாக்குறுதி அளித்தது என்பதும் நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற வேண்டும் என்று ரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் பிரச்சாரம் செய்தது. 
 
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறிய போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காது என்றும் திமுகவுக்கு இது குறித்து சவால் விடுகிறேன் என்றும் இந்த விஷயத்தில் அவர்கள் பேசுவது விதண்டாவாதம் என்றும் தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வுக்கு விலக்கு  கிடக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் திமுக எப்படி அந்த வாக்குறுதியை அளித்தது என்று பொதுமக்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva