திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:24 IST)

சேது சமுத்திரத் திட்டத்தால் பயன் இல்லை, வருமானமும் இருக்காது: அண்ணாமலை

annamalai
சேது சமுத்திர திட்டத்தால் அரசுக்கு வருமானம் இருக்காது என்றும் மீனவர்களுக்கும் இந்த திட்டத்தால் பயன் இருக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
 
இந்த நிலையில் இது குறித்து அண்ணாமலை கூறியபோது ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் தர வேண்டும் என்றும் ஆனால் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வந்தால் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும் ஒன்று திமுக எம்பி கனிமொழி மற்றொன்று டிஆர் பாலு நடத்தும் நிறுவனங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த திட்டத்தால் மீனவர்களுக்கு எந்த விதமான பயனும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran