1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Garbage dump fire in Chennai will be cleared in two days

பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ - என்ன சொல்கிறது அரசு?

சென்னை
சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். 

 
சென்னை போரூர் அருகே சாலையோரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை அதிக அளவில் வெளியாவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குப்பையில் பற்றிய தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். வெயில் அதிகமாகி குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தி ஆனதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழப்பு! – உறவினர்கள் போராட்டம்!