புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (12:56 IST)

விநாயகர் சிலை விவகாரம்: அரசு உத்தரவில் தலையிட முடியாது - உய்ரநீதிமன்றம்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்டவற்றை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியையும் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதற்கு இந்து மத அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதுகுறித்து இந்து முன்னேற்ற கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் விளக்கமளித்துள்ள தமிழக இந்து அறநிலையத்துறை, விநாயகர் சிலைகளை தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து வழிபடவது, கூட்டம் சேர்வது உள்ளிட்டவற்றிற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல விநாயகர் சிலைகளை கோவில்களில் மட்டும் வைக்கவும், அவற்றை ஆர்பாட்டமன்றி கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என கூறியுள்ள உயர்நீதிமன்றம் மத வழிபாடுகளை விட மக்களின் உயிர் மிக முக்கியமானது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.