1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:54 IST)

கஜாவில் பிறந்த பாப்பாவுக்கு கஜஸ்ரீ என பெயரிட்ட பெற்றோர்

கஜா புயலில் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் கஜஸ்ரீ என பெயரிட்டுள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதித்துள்ளது. தற்பொழுது தான் நிலைமை சற்று சீராகி வருகிறது.
 
இந்நிலையில் கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தின் போது நாகப்பட்டினம் மாவட்டம் தெற்களத்தூரை சேர்ந்த மஞ்சுளா என்ற இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரம் மின்சாரமும் இல்லை. 
 
வேறு வலி இல்லாமல் மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில் மஞ்சுளாவிற்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு சுகப் பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
 
கஜா புயலின் போது குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர்கள்.