மாஸ்டர் பிளான் போட்டு தான் ஹெலிகாப்டரில் போனேன்: எடப்பாடியாரின் புது விளக்கம்
கஜா புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதற்கான காரணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன.
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்களுக்கு நிவாராணப் பொருட்கள் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஹெலிகாப்டரில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற எடப்பாடி பழனிசாமி பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். கனமழை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. முதலமைச்சர் பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டது குறித்து கடும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். சாலை மார்கமாக சென்றிருந்தால் அனைத்து மாவட்டங்களையும் பார்வையிட்டிருக்க முடியாது. ஹெலிகாப்டர் மார்கமாக சென்றதால் சேதங்களை துள்ளியமாக கணக்கிட முடிந்தது.
ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து பாதிக்கப்பட்ட இடங்களை படம் பிடித்தேன் என கூறி தாம் பிடித்த படங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.