1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (21:00 IST)

கால்பந்து ரசிகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து..7 பேர் பலி...27 பேர் படுகாயம்

Brazil
பிரேசில் ஹரிசோன்டே என்ற பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியை  பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

பிரேசில் ஹரிசோன்டே என்ற பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியை  காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள்  பேருந்தில் சென்றனர்.

கால்பந்து போட்டி முடிந்த பின்னர், ரசிகர்கள் பேருந்தில் வீடு திரும்பினர். அப்போது ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அந்தப் பேருந்தில் 40 ரசிகர்கள் பயணம் செய்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  இதுபற்றித் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கி காயமடைந்த 27 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.