1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (19:27 IST)

நாளை முதல் மதுக்கடைகள் மூடல்: இன்றே வாங்கிக்குவிக்கும் குடிமகன்கள்!

நாளை முதல் 3 நாட்களுக்கு மதுக்கடை மூடப்படுவதால் இன்று மது பிரியர்கள் மது களை வாங்கி குவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது
 
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் தான் மூன்று நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படும் என்றாலும் தமிழகம் முழுவதும் குடிமகன்கள் இன்றே பாட்டில் பாட்டிலாக மது வகைகளை வாங்கி குவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது