1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:33 IST)

3 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்: இன்றே குவியும் குடிமகன்கள்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் காரணமாக 17ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும். எனவே இன்றும் நாளையும் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி குவிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 
 
நாளை மறுதினம் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு முடியும் வரை மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
 
இதன் காரணமாக மதுக்கடைகளில் இன்றும் நாளையும் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் மது வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் இன்றும் நாளையும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது