ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூன் 2020 (11:18 IST)

30 ஆயிரத்தை தாண்டிய சென்னை பாதிப்புகள்! – மண்டல நிலவரம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டையில் 3,928 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3,652 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,269 பேருக்கும், அண்ணா நகரில் 2,960 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உள்ளன. இவை தவிர திருவொற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கொரோனா பாதிப்புகள் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. பெரும்பாலாம சென்னைக்கு உட்பட்ட மண்டலங்கள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.