1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:22 IST)

வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ma subramanian
வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஜப்பான் தென் கொரியா ஹாங்காங் சீனா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தற்போது தமிழகத்தில் தினசரி ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும் கடந்த ஆறு மாதத்தில் ஒருவர் கூட உயிர் இறக்கவில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva