தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வருவோருக்கு கொரொனா பரிசோதனை !
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வருவோருக்கு கொரொனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா பரவியது.
இந்த ஆண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. விரைவில் 5 ஆம் கொரொனா பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், முக்கவசம் அணியவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் பார்வயாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய உத்தரவிட்டுள்ளது.