திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (07:50 IST)

தமிழகத்தில் இன்று முதல் மஞ்சள் நிற பேருந்துகள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் மஞ்சள் பேருந்துகள் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 
 
தற்போது தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்துகள் நீல நிறம் சிவப்பு நிறம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது.  இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோட்டங்களில் சேதம் அடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 
 
அதன்படி பேருந்துகள் சீரமைக்கப்பட்டு பழைய வண்ணம் மாற்றப்பட்டு புதிதாக மஞ்சள் மற்றும் வெளீர் மஞ்சள் நிறத்தில் பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன. நிறம் மாற்றப்பட்ட இந்த பேருந்துகளில் இருக்கை வசதி  கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.
 
 இந்த புதிய பேருந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.  இந்த பேருந்துகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva